‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ
பஞ்சாப் மாநிலம் அட்டாரி–வாகா எல்லையில் நடைபெற்ற சுதந்திர தின கொடியிறக்க நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் சுமார் 14 நொடிகள் ஒலித்தது.
பஞ்சாப் மாநிலம் அட்டாரி–வாகா எல்லையில் நடைபெற்ற சுதந்திர தின கொடியிறக்க நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் சுமார் 14 நொடிகள் ஒலித்ததாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில், இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி–வாகா எல்லையிலும் பாரம்பரிய கொடியிறக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புடைய ‘உங்க விஜய் நா வரேன்! Whistle அடிக்க ரெடியா?’ என்ற பாடல் சுமார் 14 நொடிகள் ஒலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்
வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வருவது வழக்கம். வீரர்களின் அணிவகுப்பு மற்றும் தேசபக்தி முழக்கங்களுக்கு மத்தியில் பாடல் ஒலித்த சம்பவம் அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, “வாகா எல்லையிலும் விஜய் பாடலா?”, “14 நொடிகள் ஒலித்த விஜய் பாடல்” என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பாடல் எந்த சூழலில் ஒலிக்கப்பட்டது, நிகழ்ச்சி ஏற்பாட்டில் அதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தொடர்ந்து, இந்திய வீரர்கள் தேசியக் கொடியை மிடுக்குடன் இறக்கியபோது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் “வந்தே மாதரம்” உள்ளிட்ட தேசபக்தி முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர்.
வாகா எல்லையின் சுதந்திர தின கொடியிறக்க நிகழ்ச்சியில் விஜய் பாடல் ஒலித்ததாக வெளியான தகவல் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!