×
 

பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!! எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

'ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா'க்கள் மற்றும் அதிநவீன, 'எலக்ட்ரானிக்' உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் வளாகத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா போன்ற அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்து வரவும் பயன்படுத்தவும் எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லோக்சபா செயலகம் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பார்லிமென்ட்டின் பாதுகாப்பு மற்றும் உறுப்பினர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் லோக்சபா உள்ளே மின்னணு சிகரெட் பிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன்பும் பல்வேறு காலகட்டங்களில் சில எம்.பி.க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளை ரகசியமாக வீடியோ எடுத்தது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் பார்லிமென்ட்டின் ஒழுங்கையும் பாதுகாப்பையும் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

தற்போது சந்தையில் எளிதாக கிடைக்கும் அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள் காட்சிகளையும் ஒலிகளையும் ரகசியமாக பதிவு செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கூலிங் கிளாஸ், பென் கேமரா உள்ளிட்டவை இதில் அடங்கும். 

இதையும் படிங்க: ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

இவற்றை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் எம்.பி.க்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று லோக்சபா செயலகம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய உபகரணங்கள் பார்லிமென்ட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பார்லிமென்ட் எஸ்டேட் வளாகத்திற்குள் வரும் எந்தப் பகுதியிலும் இத்தகைய உபகரணங்களை எடுத்து வரவோ பயன்படுத்தவோ கூடாது என்று அனைத்து எம்.பி.க்களுக்கும் கடும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் போன்ற உயரிய அமைப்பில் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையில் இது ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இந்த தடை உத்தரவு பார்லிமென்ட் நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share