×
 

75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்!

பீஹாரில், ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், 'ஹிஜாப்' அணிந்த பெண் டாக்டர் ஒருவரின் முகத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், 'ஹிஜாப்' அணிந்த பெண் டாக்டர் ஒருவரின் முகத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா: பீஹார் மாநிலத்தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதல்வர் நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். அப்போது நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் மருத்துவர் ஹிஜாப் (முகத்தை மறைக்கும் தலைமுக்காடு) அணிந்தபடி மேடைக்கு வந்து ஆணையைப் பெற்றார்.

இதையும் படிங்க: 20 வருஷம் நிதிஷ் கட்டிக்காப்பாற்றிய துறை!! தட்டிப்பறித்த பாஜக!! பீகார் அமைச்சரவையில் அதிரிபுதிரி!

அவருக்கு ஆணையை வழங்கிய முதல்வர் நிதிஷ் குமார், அவர் அணிந்திருந்த ஹிஜாப்பைத் தூக்கி முகத்தைப் பார்த்தார். இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. 75 வயதான முதல்வரின் இந்த செயல் பெண்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்தையும் பெண்களின் தனி உரிமையையும் பாதிக்கும் செயல் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் பலர் இதை விமர்சித்து வருகின்றனர்.

பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமார் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் பீஹார் அரசியலில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு! ஜோர்டான் நாடுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share