×
 

அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

பிரபல பாடகியும், பீஹார் மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான மைதிலி தாக்கூர், தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாஜக எம்.எல்.ஏ.வுமான மைதிலி தாக்கூர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார். தமிழ் பக்திப் பாடல்களைப் பாடி மக்களை ஈர்க்கும் அவரது திட்டம் பாஜக நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 26 வயதான மைதிலி தாக்கூர், இளம் வயதில் எம்.எல்.ஏ. ஆனதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பாடகியாக புகழ் பெற்ற அவர், அரசியலில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற்றது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழக இளைஞர்களிடையே மைதிலிக்கு ஏற்கெனவே நல்ல அறிமுகம் உள்ளது. அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே...’ பாடலின் அழகிய கவர் வெர்ஷனை மைதிலி பாடிய வீடியோ தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இது தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

கடந்த பிப்ரவரியில் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மைதிலி, ‘அழகான பழனிமலை ஆண்டவா...’ என்ற தமிழ் முருகன் பக்திப் பாடலை இனிமையாகப் பாடினார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆரோவில் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக விழாவிலும் அதே பாடலை அவர் மீண்டும் பாடினார்.

தற்போது கேரளாவில் பாஜக வேட்பாளர்களுக்காக மைதிலி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நெய்யாற்றங்கரை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜசேகரன் நாயரை ஆதரித்து அவர் நடத்திய பிரசாரத்தில் பெரும் கூட்டம் திரண்டது. அவரது பாடல்கள் மற்றும் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மைதிலியை பிரசாரத்துக்கு அழைக்க பாஜக நிர்வாகிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக முருகன் பக்திப் பாடல்களைப் பாடி அவர் மக்களிடையே சென்று வாக்கு சேகரிக்க இருப்பதாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் பாடல்களை அழகாகப் பாடும் மைதிலியின் வருகை தமிழக இளைஞர்கள் மற்றும் பக்தர்களிடையே நல்ல எதிரொலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் இருந்து வந்த ஒரு இளம் பெண் பாடகி-அரசியல்வாதியின் தமிழக பிரசாரம் தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
 

இதையும் படிங்க: மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share