பொய் பிரசாரத்தின் தலைவர்! நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாஜக!
நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவராக இருக்கிறார் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெர்மனியில் பேசிய உரையில் இந்திய அரசின் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) போன்ற அமைப்புகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தி நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவராக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அது முடிவடைவதற்கு முன்பே ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பாஜகவினரால் ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அங்கு, கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பெர்லின் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் உரையாடிய ராகுல், பின்னர் ஹெர்டி பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அந்த உரையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜகவின் ஆயுதம்! காங்கிரஸை தான் குறிவைக்கிறாங்க! ராகுல்காந்தி ஆதங்கம்!
அந்த உரையில் ராகுல் காந்தி, “அமலாக்கத்துறை, சிபிஐ, புலனாய்வுத்துறை ஆகியவற்றை பாஜக அரசு ஆயுதம்போல பயன்படுத்துகிறது. காங்கிரஸை ஆதரிக்கும் தொழிலதிபர்கள் உடனடியாக மிரட்டப்படுகின்றனர். இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுத்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா கூறியதாவது: “ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, பொய்ப் பிரசாரத்தின் தலைவர், சுற்றுலாத் தலைவர் மற்றும் தப்பியோடும் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
அவர் குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு ஓடிவிடுகிறார். நாட்டை அவமதிக்கும் கலையில் அவர் கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்தியாவின் நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும், இந்திய மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என்றும் பெர்லினில் கூறியுள்ளார்.
அவரின் ஒரே நோக்கம் இந்தியாவுக்கு எதிரான சோரோஸின் முகவர்களைச் சந்திப்பதுதான். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கும் இல்ஹான் ஓமர், சலில் ஷெட்டி போன்றோரைச் சந்திப்பதுதான் அது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சை, ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவற்றில் அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பு இதை இந்தியாவுக்கு எதிரான செயல் எனக் கூறி வருகிறது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை என்றாலும், இது அரசு அமைப்புகளின் துஷ்பிரயோகம் குறித்த விவாதத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகால திட்டத்தை ஒரே நாள்ல முடிச்சிட்டீங்கல்ல! புதிய சட்டம் கிராம விரோதம்! மோடி மீது ராகுல் தாக்கு!