×
 

உதிரக் கொடை உயிர்க் கொடை...ராணுவ வீரர்களுக்கு உதவ வாருங்கள்...சண்டிகர் நிர்வாகம் அழைப்பு!

பாகிஸ்தான் தாக்குதலால் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது எல்லைக்கோடு பகுதி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் இந்தியா மீது அத்துமீரி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் போக்கில் ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!

பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் ரத்ததானம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செய்யும் ரத்ததானம் ராணுவ வீரர்களை காப்பாற்ற உதவும் என சண்டிகர் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: 5 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பகல்காம் தாக்குதலுக்கு பழிக்குப்பழி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share