டிராக்டரில் அள்ளி செல்லப்பட்ட ஜெய்ஷ் முகமது உடல்கள்..! அதிகரிக்கும் சாவு எண்ணிக்கை..!
இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ஜெய்ஷ் இ முகமது உடல்கள் பாகிஸ்தான் தேசியக்கொடி போர்த்தப்பட்டு டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் 9 இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தடைசெய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா உறுப்பினர்கள், லாகூரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேயில் உள்ள பயங்கரவாதக் குழுவின் தலைமையகத்தில் இந்திய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று நபர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். காரி அப்துல் மாலிக், காலித் மற்றும் முடாசிர் ஆகியோருக்கான இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் முரிட்கேயில் பலத்த பாதுகாப்பின் கீழ் நடைபெற்றன.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு சல்யூட்! ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ பதிவில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
https://x.com/osinttv/status/1920052533965234552?s=48&t=qNQYYj2ecdu_vtrCMK65ZQ
இந்நிலையில் இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ஜெய்ஷ் இ முகமது உடல்கள் பாகிஸ்தான் தேசியக்கொடி போர்த்தப்பட்டு டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளின் பிணத்தில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை... வெட்கமற்ற பாகிஸ்தான்..!