×
 

இந்தியா - சீனா இடையே பகையை வளர்க்க திட்டம்! கோள் மூட்டும் அமெரிக்கா! மூக்குடைப்பு!

அமெரிக்கா சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்: அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) வெளியிட்ட அறிக்கையை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது. இந்தியா - சீனா இடையிலான எல்லை நிலைமை நிலையானது என்றும், அமெரிக்கா பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், சீனா பாகிஸ்தானைப் போல ராணுவ அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா உறவு பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக அருணாச்சல பிரதேச விவகாரத்தில் மோதல் போக்கு அதிகரிக்கும் என்று அறிக்கை எச்சரித்திருந்தது.

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: “பென்டகனின் அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை திரித்துக் காட்டுவதாக உள்ளது.

இதையும் படிங்க: 16,000 அடி உயரத்தில் சாலை! சீனா எல்லையில் இமயமலையில் இந்திய ராணுவம் அதிரடி!

அமெரிக்கா சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாடுகளை உருவாக்க முயல்கிறது. இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கமும் அதில் உள்ளது. உண்மையில் இந்தியாவுடனான எல்லை நிலைமை முழுமையாக நிலையானது” என்றார்.

மேலும், “அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சாக்குப்போக்குகளைத் தேடுகிறது. இத்தகைய அறிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று லின் ஜியான் தெரிவித்தார்.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவின் இத்தகைய அறிக்கைகள் பிராந்திய அமைதிக்கு உதவாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 1000 அடி பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி! உயிர்பிழைத்த ஒற்றை நபர்!! அருணாச்சலில் கோரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share