#BREAKING: CUET தேர்வு முடிவுகள் வெளியீடு... பெரும் எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!
நாடு முழுவதும் கியூட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கைக்கான முக்கிய நுழைவுத் தேர்வான சியூஇடி யுஜி 2026 தேர்வு மே 11 முதல் 31 வரை மற்றும் ஜூன் 6 முதல் 7 வரை 321 நகரங்களில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 15 சர்வதேச நகரங்களிலும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 15.68 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 11.64 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 5.85 லட்சம் பெண் விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.
தேர்வு முடிவுகள் இன்று என்டிஏவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இறுதி பதில் திறவுகோல் ஜூன் 22 அன்று வெளியிடப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் அட்டையை cuet.nta.nic.in அல்லது examinationservices.nic.in இணையதளத்தில் உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் தேவைப்படும்.
இந்த முடிவுகள் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு மட்டுமே செல்லுபடியாகும். என்டிஏ தேர்வு நடத்துதல், மதிப்பெண்கள் தயாரித்தல் ஆகியவற்றுடன் தன் பொறுப்பை முடித்துக்கொள்கிறது. மெரிட் லிஸ்ட் தயாரித்தல், சேர்க்கை நடைமுறைகள் போன்றவை பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி செயல்படுத்தும்.
இதையும் படிங்க: ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!
சியூஇடி தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் சிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த ஒற்றைத் தேர்வு முறை சேர்க்கை செயல்முறையை எளிமையாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!