ஆந்திராவையே உலுக்கிய கோர சம்பவம்... 4 பேர் உடல் சிதறி பலி... மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!
அனுமதி இல்லாமல் வெடிபொருள்கள் பதிக்க வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தி வேறு எங்காவது இதுபோன்று பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் கதிரி மண்டலத்தின் கும்மரவந்தலபள்ளே என்ற கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் டெட்டனேட்டர்கள் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திடிரென அதிக வெப்பம் காரணமாக சமையலுக்கு வைத்திருந்த டெட்டனேட்டர்கள் கேஸ் சிலிண்டருன் வெடித்தது.
வெடிவிபத்தின் காரணமாக சிலிண்டர் இருந்த வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு அருகில் இருந்த வீடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கதிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மேலும் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி இறந்த உயிர்... 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!
இதுகுறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் அனிதா காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், அனுமதி இல்லாமல் வெடிபொருள்கள் பதிக்க வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தி வேறு எங்காவது இதுபோன்று பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!