வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

ஆளுநர் பதவியின் கண்ணியம் காக்கணும்.. நடத்தை விதிகள் கொண்டு வாங்க.. நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திமுக முடிவு!

ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காக்க நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் விவரம் வருமாறு:

* ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட, ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்குக் கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்.

* மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மத்திய பாஜக அரசை பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த தமிழக முதல்வருக்கும், துணை நின்ற மக்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது .

* உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: திமுககாரன் என்றால் குற்றம் செய்வதற்கு அதிகாரபூர்வ அடையாளமா.? திமுக அரசை வெளுத்து வாங்கும் வானதி சீனிவாசன்!

* கூட்டாட்சி தத்துவம், மாநில கல்வி உரிமை, உயர் கல்வி அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி திமுக மாணவரணி சார்பில் பிப்.6ம் தேதியன்று போராட்டம் நடத்தப்படும்.
திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள்.

* சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

* தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, இந்த முறை தமிழகத்தின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்துக்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

இதையும் படிங்க: திமுக – காங்கிரஸ் கூட்டணி டமால்..? இரு கட்சித் தலைவர்களிடையே அதிகரிக்கும் புகைச்சல்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी