வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது..அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை..!

ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதி தான் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்  .காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு  விருப்பமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இணையதள முகவரிக்கு விருப்பமனுவை அளிக்கலாம். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.என்றார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 7 ஆம் தேதி காலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.

வருகிற 8 ஆம் தேதி கிராமந்தோறும் காங்கிரஸ் என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடக்கிறது. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜேய் குமார், சூரச் ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி  கமிட்டியை யாரெல்லாம் சிறப்பாக செய்து முடிக்கிறார்களோ அவர்களுக்கு மாநில அளவில் பதவி, எம்.எல்.ஏ போன்ற பதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும்.என்றும் பொங்கல் திருநாளில் ஒவ்வொரு ஆண்டும் ரேசன் அட்டை காரர்களுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பார்கள்‌. அதன்படி இந்த ஆண்டும் குறைந்தபட்சம் அரசு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது.தற்போது, இந்த வழக்கை சிறப்பு குற்றப்புலனாய்வு குழு விசாரிக்கிறது.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, "யார் அந்த சார்" என்று தெரிந்துவிடும். எந்த சார் ஆக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தொடர்பு ஆணையம் இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை  ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதி தான்.கும்பகோணத்தில் தி.மு.க கவுன்சிலருக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து மேயர் சரவணனிடம், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்க உள்ளோம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கிய பாஜக… மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் தயார்..!

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் காங்கிரஸின் பித்தலாட்ட அரசியல்… கொடூர வரலாற்றை நினைவூட்டி பங்கம் செய்த முதல்வர்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी