×
 

#BREAKING: பாஜகவுக்கு அடுத்த தலைவலி! அடுத்த லிஸ்ட் ரெடி... FIRE MODE-ல் காங்கிரஸ்

வாக்குத் திருட்டு தொடர்பான அடுத்த கட்ட பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. 

இதையும் படிங்க: அஸ்திவாரத்தை அசைச்சு பார்த்துடீங்க.. இனி உங்களை தொட விடமாட்டோம்.. ராகுல் காந்தி ஆவேசம்..!!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு "100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இவை வெளியிடப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என எச்சரித்தார்.

மகாராஷ்டிரத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டதாகவும், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேடுகள், தேர்தல் ஆணையத்தின் உயர் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் பாஜகவின் ஆதரவுடன் செயல்படுவதாகவும், இது தேசத்துரோக செயலாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். 

இந்த நிலையில், அடுத்த கட்ட வாக்குத்திருட்டு தொடர்பான பட்டியலை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தொகுதிவாரியாக எவ்வளவு வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்பதை விளக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மகாதேவ்புரா போன்ற 48 தொகுதிகளிலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது ஆதாரங்களுடன் வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

48 தொகுதிகளிலும் வாக்குகள் திருடப்படாவிட்டால் பாஜக ஆட்சி அமைத்திருக்காது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. 7 அல்லது 8 கட்டங்களாக பட்டியலை விதை விட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காலம் மாறும்.. தரமான சம்பவம் இருக்கு! தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share