×
 

2026ல் குடியரசு தின அணி வகுப்பு!! சிறப்பு விருந்தினர் யார் யார்? வெளியானது அப்டேட்!

2026ம் ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய தலைவர்கள்உர்சுலா வான் டெர் லேயன், அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது நீண்டகால வழக்கம். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது நீண்டகால வழக்கம். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன.

இந்த வருகைக்கு முக்கிய காரணம், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதாகும்.

இதையும் படிங்க: காசாவுக்கு பாக்., படையை அனுப்புங்க! அழுத்தம் தரும் ட்ரம்ப்! உள்நாட்டு எதிர்பால் கையை பிசையும் அசிம்!

டிசம்பர் 8-ஆம் தேதி மீண்டும் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இரு தரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இதனால் ஐரோப்பிய தலைவர்களின் வருகை வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் தலைவர்கள் இந்தியாவின் இராணுவ வலிமை, கலாச்சார பெருமை ஆகியவற்றை நேரில் கண்டு ரசிப்பர். இது இரு தரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் குடியரசு தினத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்:

  • 2025 — இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ
  • 2024 — பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
  • 2023 — எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி
  • 2021-2022 — கொரோனா பரவல் காரணமாக யாரும் பங்கேற்கவில்லை
  • 2020 — பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ
  • 2019 — தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா
  • 2018 — ஆசியான் அமைப்பின் 10 நாட்டுத் தலைவர்கள்
  • 2017 — அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்
  • 2016 — பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஓலாந்தே
  • 2015 — அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
  • 2014 — ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே
  • 2013 — பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், 2026 குடியரசு தின விழா இந்த உறவுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காலிப் பணியிடம் இருந்தா தான் “ஒப்பந்த வேலைக்கு உடனடி நிரந்தரம் கிடையாது!” – அமைச்சர் மா.சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share