×
 

நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிருடன் எரிந்து பலியான கொடூர சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் லிசாடி கேட் பகுதியில் உள்ள இக்பால் அகமதுவின் வீட்டில் இரவு 8:49 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக வீடு முழுவதும் பரவியதால், உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் தவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிருடன் எரிந்து பலியான கொடூர சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இக்பால் அகமதுவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். ஆனால் வீட்டிற்குள் டைலரிங் வேலை நடந்து வந்ததால், ஏராளமான துணிகள் முன்னதாகவே சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அவையும் விபத்தில் பற்றி எரிந்ததால் தீ வேகமாக பரவியதோடு, கட்டுக்குள் கொண்டு வர அதிக நேரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கோர விபத்தில் கித்வாய் நகரில் உள்ள சூரஹி வாலி மசூதிக்கு அருகிலுள்ள  3ம் நெம்பர் வீட்டில் வசிக்கும் ருக்சார் (25), மஹ்பிஷ் (12), ஹம்மாத் (4), அக்தாஸ் (4), நபியா (4 மாதங்கள்) மற்றும் இனாயத் (4 மாதங்கள்) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த அமீர் பானோ (55) என்ற மற்றொரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். 

இதையும் படிங்க: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்...! 

4 மாத கைக்குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்த இந்த விபத்து இந்த ஷார்ட் சர்க்யூட் காரணமாக  ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share