×
 

அமெரிக்கா, சீனாவுக்கு ஆப்பு ரெடி!! இந்தியாவுக்கு தோள் கொடுக்கும் ரஷ்யா!! அதிகரிக்கும் போர் பலம்!

'சுகோய் -57' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. ரஷ்யாவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய்-57ஐ இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக (100 சதவீதம்) வழங்க ரஷ்யா தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சியில் ரஷ்ய அரசு ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசொபோரோன் எக்ஸ்போர்ட்ஸ் உயரதிகாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்றால் என்ன? ரேடாரில் பிடிபடாத ஸ்டெல்த் திறன், மிக வேகமான பறப்பு, அதிநவீன ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய கட்டுப்பாடு ஆகியவை இதன் சிறப்புகள். உலகில் தற்போது அமெரிக்கா (F-22, F-35), ரஷ்யா (சுகோய்-57), சீனா (J-20) ஆகிய மூன்று நாடுகளிடம் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுடன் முழு வீச்சில் போர் வெடிக்கும்!! பாக்., அமைச்சர் திமிர் பேச்சு!! மீண்டும் போர் பதற்றம்!

ரஷ்ய அதிகாரி என்ன சொன்னார்? “இந்தியாவுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை உறவு உள்ளது. எந்தத் தடையும் வந்தாலும் இந்தியாவை ஒருபோதும் கைவிட மாட்டோம். சுகோய்-57 விமானத்தை இந்தியாவில் தயாரிக்க அனைத்து முக்கிய உதிரிபாகங்களும் இங்கேயே உற்பத்தி செய்யும் வகையில் முழு தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்யத் தயார். இந்தியத் தேவைக்கேற்ப விமானத்தை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம்” என்று தெரிவித்தார்.

பின்னணி என்ன? சமீபத்தில் இந்திய ராணுவ அமைச்சகம் ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தொழில்நுட்பம் தர மறுத்து வருகின்றன. தடை வந்தால் உதிரிபாக விநியோகம் நிறுத்தப்படும் என்ற அச்சமும் உள்ளது. இதற்கு மாற்றாக ரஷ்யா இந்தப் பெருந்தன்மை முன்வந்துள்ளது.

முன்பு நடந்தது என்ன? 2007-ல் ரஷ்யாவுடன் இணைந்து FGFA (Fifth Generation Fighter Aircraft) திட்டத்தில் இந்தியா இணைந்தது. ஆனால் செலவு மிக அதிகமானதால் 2018-ல் இந்தியா விலகிக்கொண்டது. தற்போது ரஷ்யா மீண்டும் முழு ஒத்துழைப்புடன் வந்துள்ளது.

புடின் வருகை முக்கியம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்று புடின், லாவ்ரோவைச் சந்தித்தார். ரஷ்ய பாதுகாப்பு விவகாரத் தலைவர் நிகோலாய் பத்ருஷேவ் டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

டிசம்பரில் புடின் இந்தியா வரும்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய விமானப்படைக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக அமையும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: தற்கொலைகளின் தலைநகரம் தமிழ்நாடு... என்னதான் நடக்குது? விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share