×
 

மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் நீட் தேர்வு வேண்டாம் என்றால் மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலம் பகுதியில் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வினாத்தாள் கசிவு காரணமாக இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக நீட் தேர்வைக் கட்டாயப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். 

விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றின் படித்துறை, ஜங்ஷன் சாலையில் உள்ள அரசு கிளை அச்சகம், மற்றும் கண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவு மேலாண்மை மையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அளித்த பேட்டியின் விவரங்கள் பின்வருமாறு

வினாத்தாள் கசிந்ததே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு முதன்மைக் காரணம். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

தமிழ்நாட்டில் மாணவர் அமைப்புகளும் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றன. மக்கள் சக்திதான் மிகப்பரிய சக்தி. ஒட்டுமொத்த மக்களின் விருப்பமும் 'நீட் தேர்வு வேண்டாம்' என்பதாக இருக்கும்போது, மத்திய - மாநில அரசுகள் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.'

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். அரிசி டன் ஒன்றுக்கு ரூ. 15,000 வரை விலை உயர்ந்துள்ளது. அரிசி ரகத்திற்கு ஏற்ப கிலோவுக்கு ரூ. 15, 30, 40 என விலை ஏற்றமடைந்துள்ளது இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தான நிகழ்வாகும். தற்போது எங்குமே தண்ணீர் இல்லை, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து தண்ணீர் வரவில்லை; அதேநேரத்தில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்கிறார்கள். இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கலில் தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீஸாகியுள்ளது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்களுடைய தலைவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share