பசிக்காக அழுத 2 மாத குழந்தை... ஆத்திரத்தில் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்..!!
ஹைதராபாத்தில் பசிக்காக அழுத இரண்டு மாத குழந்தையை தாய் அடுப்பில் வைத்து எரித்த கொடூர நிகழ்வு அரங்கேறி உள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள பவுரம்பேட் என்ற இடத்தில், கட்டுமான தொழிலாளர்களின் தற்காலிக கொட்டகத்தில் நிகழ்ந்த ஒரு மிகக் கொடூரமான சம்பவம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று தன் தாயின் கைகளால் கொல்லப்பட்டது. பசிக்காக அழுது குழந்தையை அடுப்பில் வைத்த தாயின் செயல் பதறச் செய்கிறது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திர் ஆதிவாசி மற்றும் அவரது மனைவி மம்தா அஹிர்வார் ஆகிய இருவரும் ஹைதராபாத் புறநகரில் உள்ள சனரெல்லி அபார்ட்மெண்ட்ஸ் கட்டுமான தளத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் காலை, குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. பசியால் அல்லது வேறு ஏதோ காரணத்தால் அழுகை நிற்காமல் இருந்திருக்கலாம். அந்த அழுகை மம்தாவை மிகவும் தாங்க முடியாத அளவுக்கு தொந்தரவு செய்தது. அவர் முதலில் குழந்தையின் வாயில் துணியை அடைத்து அழுகையை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. பிறகு குழந்தையின் கால்களைக் கட்டி, எரிந்து கொண்டிருந்த மரவெட்டி அடுப்பில் வைத்ததில் குழந்தை எரிந்து உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டது போட்டதுதான்..!! இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான 15% வரி தொடரும்..!! ஆட்டம் ஆடும் டிரம்ப்..!!
மாலை நேரத்தில் கணவர் ராஜேந்திர் வேலையிலிருந்து திரும்பி வந்தபோது, அந்த அதிர்ச்சிகரமான காட்சியைப் பார்த்தார். அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தகவல் சொன்னார். அவர்கள் போலீசாரை அழைத்தனர். போலீஸார் விரைந்து வந்து மம்தாவை கைது செய்தனர். குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்தனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்..!! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டம்..!!