பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால்... ஐ.நாவிடம் கட் அண்ட் கறார் கன்டிஷன் போட்ட இந்தியா!
பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, திடீரென இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகையை அறிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தானே எதிர்பார்க்காத வகையில் அதிகாலை ஒன்றே கால் மணியிலிருந்து 1:35 மணி வரைக்கும் சரியாக 25 நிமிடங்களில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்புகளின் 9 இடங்களை இந்தியா ரஃபேல் விமானம் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கி தும்சம் செய்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது இந்தியா. இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதோட விட்டுடாதீங்க.. தீவிரவாதிகளை வேரோடு பிடுங்கி எறியுங்கள்..! வினய் நர்வால் மனைவி ஆதங்கம்..!
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் ஏன் எடுக்கப்பட்டது, அதில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் உறுப்பு நாடுகளாக இருக்கக்கூடிய நாடுகளினுடைய தூதர்களை அழைத்து சவுத் பிளாக்கில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூட்டம் ஒன்றை நடத்தியது.
அந்த கூட்டத்தில் இந்த ஆபரேஷன் சிந்தூரின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். அப்பொழுது பஹல்காம் தாக்கல் சம்பவத்திற்கு பதிலடியாகத்தான் இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார் அதுமட்டுமல்லாமல் ஆபரேஷன் சிந்தூர் உடைய இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மீண்டும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்படும் என மத்திய வெளியுறவு வெளியுறவு துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும் இந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்களையும் பதிவு செய்த அவர், இந்த சம்பவத்திற்கு அந்த நாடுகளினுடைய ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டார். அப்பொழுது பாகிஸ்தான் சீண்டினால் மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என்ற திட்டவட்டமான கருத்தை மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: டிராக்டரில் அள்ளி செல்லப்பட்ட ஜெய்ஷ் முகமது உடல்கள்..! அதிகரிக்கும் சாவு எண்ணிக்கை..!