×
 

பயங்கரவாதி எங்கிருந்தாலும் கதைமுடிப்பு! காஷ்மீர் முதல் குமரி வரை பறக்கும் ஆர்டர்! PRAHAAR Policy!!

PRAHAAR என்ற தலைப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்தியா முதல் முறையாக விரிவான தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் உத்தியை வெளியிட்டுள்ளது. 'பிரஹார்' (PRAHAAR - பொருள்: தாக்குதல்) என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் முதல் சைபர் தாக்குதல், ட்ரோன் மூலம் ஆயுத கடத்தல் வரை அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் பல அடுக்கு உத்தியை இது வகுத்துள்ளது.

கொள்கையின் சாராம்சம்: இந்தியா நீர், நிலம், வான் என மூன்று பரப்புகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. மின்சாரம், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு, அணு ஆற்றல் நிலையங்கள் போன்ற முக்கிய பொருளாதார துறைகளை பாதுகாக்கும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எந்த மதம், இனம், தேசியம் அல்லது நாகரிகத்துடனும் இணைக்கவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. ஜிகாதி அமைப்புகள், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்றவை ஸ்லீப்பர் செல்கள் மூலம் இந்தியாவில் வன்முறையை தூண்டுகின்றன.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள்... களைகட்டிய அதிமுக அலுவலகம்..! ஜெ. திருவுருவச் சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!!

வெளிநாட்டில் இருந்து பிரிவினைவாதிகள் சதி செய்கின்றனர். பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. கிரிமினல் நெட்வொர்க்குகள் பயங்கரவாதிகளுக்கு ஆட்கள், தளவாடங்கள் குவிக்கின்றன.

டார்க் வெப், கிரிப்டோகரன்சி மூலம் பயங்கரவாத கொள்கைகள் பரப்பப்பட்டு, நிதி திரட்டப்படுகிறது. ரசாயனம், உயிரியல், ரேடியோலாஜிக்கல், அணு ஆயுதங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைக்காமல் தடுப்பது சவாலாக உள்ளது.

கொள்கையின் 7 முக்கிய தூண்கள் (PRAHAAR அகரவரிசை):

  • Prevention: தாக்குதல்களை தடுத்து குடிமக்களை பாதுகாத்தல்
  • Responses: விரைவான, சரியான அளவிலான பதிலடி
  • Aggregating capacities: அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு
  • Human rights & Rule of Law: மனித உரிமை அடிப்படையிலான செயல்பாடு
  • Attenuating conditions: தீவிரவாதத்தை தூண்டும் காரணங்களை குறைத்தல் (ரேடிகலைசேஷன்)
  • Aligning international efforts: சர்வதேச ஒத்துழைப்பு
  • Recovery & resilience: சமூக அடிப்படையிலான மீட்சி

விசாரணையில் எஃப்.ஐ.ஆர். முதல் வழக்கு முடிவு வரை சட்ட நிபுணர்களை இணைக்க வேண்டும். சர்வதேச, பிராந்திய ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். இளைஞர்களை பிரிவினைவாதத்துக்கு ஈர்க்கும் முயற்சிகளை உடனடியாக தடுக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், மத போதகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கொள்கை இந்தியாவின் 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையை வலுப்படுத்தி, புரோஅக்டிவ் அணுகுமுறையை வலியுறுத்துகிறது. எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தயாராகும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பதி லட்டின் தரம் காக்க ₹25 கோடியில் லேப்!! ₹3.5 கோடியில் பிரான்ஸ் மெஷின்!! அதிரடி காட்டும் ஆந்திரா அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share