மீண்டும் குண்டுவெடிப்பு ... பற்றி எரிந்த காவல் நிலையம்... 7 பேர் பலி; 30 பேர் படுகாயம் ...!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் ஒரு வெடிப்புச் சம்பவம் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடி விபத்தில் ஏழு பேர் பலியாகினர், 30 பேர் வரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருக்கக்கூடிய நவகாம் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்தோடு கூடிய வெடி விபத்து நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் காவல் நிலையத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எறிந்து சேதமடைந்ததோடு அருகில் இருக்கக்கூடிய பல.கட்டிடங்கள், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறையினுடைய வாகனங்கள் உள்ளிட்டவை தீப்பற்றி எறிந்தன .
இது முதலில் குண்டுவெடிப்பாக இருக்கலாமோ என்கிற ஒரு பெரிய சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஏனெனில் டெல்லி செங்கோட்டை தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் இந்த மருத்துவர்களுடைய பயங்கரவாத குழு தொடர்பான வழக்கை இந்த நவஹாம் காவல் துறைதான் மிக தீவிரமாக விசாரித்து வந்தது.
இதையும் படிங்க: #BREAKING: நக்ரோடா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி...! கொண்டாட்டம்..!
ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாத அமைப்பின் சதியை முறியடித்த பிறகு, ஸ்ரீநகர் போலீசார் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல காஷ்மீர் மருத்துவர்களை கைது செய்தனர். அப்போதிருந்து, பயங்கரவாத சதி வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் நௌகாம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
எனவே நேற்று நடைபெற்ற அந்த வெடிப்பு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் அண்மையில் ஹரியானா மாநிலம் சரிதாபாத்தில் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த வெடி பொருள் இந்த ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய நவகாம் காவல் நிலையத்தில் தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு தடவியல் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் தாசில்தார் முன்னிலையில் இந்த சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை ஆய்வு செய்ய சென்றதாகவும், அப்போது தவறுதலாக கையாண்டதில் அவை வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயமடைந்து பலர் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏழு பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் 30 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தகவல் முதற்கட்ட தகவல் கிடைத்திருக்கிறது.
நலகாம் காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் சத்தம் சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி... ஜம்மு-காஷ்மீர் மருத்துவ கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு...!