நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!
+2 மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், ஆறுதல் கூறச் சென்ற mp கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிலிருந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக தனியாகச் சென்றுள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் திரும்பாததால், பெற்றோரும் உறவினர்களும் தேடியபோது கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் முகத்தில் பலத்த காயங்கள், சிதைவுகள் இருந்ததுடன், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது. கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கிராம மக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர்.
மாணவி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகாரை ஏற்க மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!
இதனால் கோபமடைந்த பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்றார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவனும் சென்று இருந்தார். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். நேற்று ஏன் வரவில்லை என்று கேட்டு ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மேலும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!