இதவிடவா பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகுது? விஜய் கரூர் செல்லாதது குறித்து கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்...!
விஜய் கரூர் சென்று மக்களை சந்திக்காதது பற்றி CPIM தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆளும் திமுக அரசு காரணம் என ஒரு பக்கமும் விஜயின் தாமதமே முதல் காரணம் என்று மறுபக்கமும் பேசப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கவே இல்லை என்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை அணுகவில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட வருகிறது.
விஜய் நிச்சயம் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் நிகழ்ந்த போது விஜய் மருத்துவமனைக்கு சென்று இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும் முன்னெச்சரிக்கையாக அவர் சென்னைக்கு திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: CPI(M) பி. சண்முகத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அட்மிட்!
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது குறித்து CPIM தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். விஜய் மருத்துவமனை சென்றால் அசம்பாவிதம் நடக்கும் என்றால் இதைவிட என்ன நடந்து விடப்போகிறது என கேள்வி எழுப்பினார். வழக்கு போடக்கூடாது, கைது செய்யக் கூடாது என்றால் அப்படியே விட்டு விடலாமா என கேள்வி எழுப்பினார். சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்பதெல்லாம் பாஜகவின் ஆதரவை பெறும் முயற்சி தான் என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: உயிர்கள் போயிருக்கு... அரசியலாக்காதீங்க! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி...!