ஆடி கிருத்திகை: ஆகஸ்ட் 6-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...!
ஆகஸ்ட் 6 ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணி முருகப்பெருமான் கோவில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆன்மீகத் திருத்தலங்களில் ஆடி மாதக் கிருத்திகை திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகும். குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை பெருவிழா உலகப் புகழ்பெற்றது.
இந்த ஆண்டு திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற உள்ள ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்யவும், உள்ளூர் மக்கள் திருவிழாவில் பெருமளவில் பங்கேற்கவும் ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
2026ஆம் ஆண்டு, ஆடிக் கிருத்திகை விழா, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, திருத்தணி முருகன் கோயிலில் அன்றைய தினம் சிறப்பான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.
இதையும் படிங்க: 24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!
எனவே, ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது,
ஆடிக் கிருத்திகை நாளில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். ஏராளமான மக்கள் அன்றைய தினம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
இதையும் படிங்க: உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்... 4 இந்தியர்கள் துடிதுடித்து பலி...!