வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி… அரசுடன் கிரிமினல்கள் தொடர்பு.. விசாரணை நடத்த வலியுறுத்தல்..!

கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் ரூ.30 கோடி ஈட்டியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி இருந்தார். இந்த படகோட்டி குற்றப் பின்னணி கொண்டவர் என்றும் அவர் ரூ.30 கோடி லாபம் ஈட்டியது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா பற்றி முதல்வர் யோகி தொடர்ந்து பெருமிதப்பட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் 130 படகுகள் மூலம் ரூ.30 கோடி ஈட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

பிண்ட்டு மெஹ்ரா எனும் அந்த படகோட்டி குடும்பம், பிரயாக்ராஜின் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதை அறிந்தோ, அறியாமலோ அவரை உ.பி முதல்வர் பாராட்டியது அந்த மாநிலத்தில் சர்ச்சையாகி விட்டது.

இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி.. வசமாக சிக்கிய தீவிரவாதி… குலைநடுங்க வைக்கும் சதித்திட்டம் அம்பலம்..!

இந்நிலையில், உ.பியின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் இப்பிரச்சனையில் உ.பி அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். படகோட்டி பிண்ட்டு மெஹ்ரா ரூ.30 கோடி லாபம் ஈட்டியது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து உ.பியின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவின் சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி லாபம் சம்பாதித்த படகோட்டியின் குடும்பம் குற்றப் பின்னணி கொண்டது. இவரை முதல்வர் யோகி சட்டப்பேரவையில் பாராட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணி கண்டறியப்பட வேண்டும். இந்த படகோட்டி உண்மையிலேயே ரூ.30 கோடி ஈட்டினார் எனில் அதற்காக அவர் செலுத்திய ஜிஎஸ்டி தொகை எவ்வளவு?

இந்த குற்றவாளி படகோட்டியுடன் ஒப்பந்தம் இட்டுக்கொண்டு அவரை முதல்வர் பாராட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் உ.பி பாஜக ஆட்சியில் கிரிமினல்களுக்கு தைரியம் வளர்ந்து பெருகியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

45 நாள் மகா கும்பமேளாவின் போது பக்தர்களை ஏற்றி செல்வதன் மூலம் ஒரு குடும்பம் எப்படி இவ்வளவு சொத்தை குறைக்க முடியும் என்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

குற்ற பதிவை நீங்கள் ஒரு கணம் மறந்து விட்டாலும் இந்த லாபம் பக்தர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர் என்பதை காட்டவில்லையா ?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

கடந்த 2019 கும்பமேளா முதல் படகுகளை வைத்துள்ள அரேலி பகுதியின் பிண்ட்டு மெஹ்ரா குடும்பம் தொழில் செய்யத் தொடங்கி உள்ளது.

இவர்களிடம் இருந்த 60 படகுகளுடன் மகா கும்பமேளாவுக்காக மேலும் 70 படகுகளை வாங்கி இயக்கியதில் ரூ.30 கோடி சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: 75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்…!  

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी