×
 

#BREAKING: வெடித்து சிதறிய விமானம்..!! அஜித் பவார் உயிரிழப்பு..!! மராட்டிய அரசியலில் பெரும் அதிர்ச்சி..!!

மராட்டிய மாநிலம் பாராமதியில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் சிக்கி, அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார், இன்று காலை பாராமதியில் நிகழ்ந்த கோர விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி மராட்டிய மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து பாராமதியில் நடைபெறவிருந்த ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை சிறிய ரக சார்ட்டர் விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை சுமார் 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.

தரையிறங்க முற்பட்டபோது விமானம் நிலைதடுமாறி ஓடுதளத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் விமானத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

விபத்து நடந்தபோது விமானத்தில் அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமானிகள் உட்பட மொத்தம் ஆறு பேர் இருந்தனர். இந்த விபத்தில் சிக்கி அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த மேலும் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திமுக 2026 தேர்தல் அறிக்கை கூட்டம்: திருச்சியை இரண்டாம் தலைநகராக்க அமைச்சர்கள் கோரிக்கை!

விபத்து நடந்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அஜித் பவாரின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் குழு பாராமதிக்கு விரைந்துள்ளது.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! - குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share