×
 
☰

"ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

டெல்லியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராகப் போராடிய ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது எனத் தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (S.I.R.) நடைமுறைகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் ஆட்சேபகரமானது என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாகத் தடுத்துக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் (S.I.R.) நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நடவடிக்கையைத் தமிழக வெற்றிக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

 

மேலும், "நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனநாயக வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் மிகவும் ஆட்சேபகரமானது.

ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துகளையும் போராட்டங்களையும் ஒடுக்கும் வகையிலான இத்தகைய கடுமையான அணுகுமுறைகளைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தவெக வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். நடைமுறை தொடர்பான கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ள தவெக தலைமை, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறையைத் தொடர்ச்சியாக மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தது.

தற்போதும் அதே உறுதியான நிலைப்பாட்டையே தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு நாடு தழுவிய அளவில் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆதரவு அறிக்கை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

 

இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share