×
 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரித்து கொன்ற கிராம மக்கள் - தப்பியோடிய சிறுவன் - நடுநடுங்க வைக்கும் காரணம்!

பீகார் மாநிலம் பூர்னியாவில், சூனியக்காரர்கள் என சந்தேகிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பூர்னியா மாவட்ட தலைமையகத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஃபாசில் காவல் நிலையத்துக்குட்பட்ட டெட்காமாவில், சூனியக்காரி என சந்தேகிக்கப்பட்ட ஒரு வயதான பெண் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை உயிருடன் எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த கிராமத்தில் சமீபத்தில் ஒரு குழந்தை இறந்துள்ளது, அதற்கு 70 வயதான சீதா தேவி தான் காரணம் என கிராம மக்கள் நம்பியுள்ளனர். சீதா தேவி வைத்த சூனியத்தால் தான் குழந்தை உடல் நலமில்லாமல் போனதாக கிராமத்தினர் பேசி வந்துள்ளனர். 

நேற்றைய தினம் மின்சாரம் இல்லாத சமயமாக பார்த்து, கையில் கட்டை, கம்புகளுடன் சீதா தேவி வீட்டை அடைந்த கிராம மக்கள் அவரது மகன் பாபுலால் ஓரான், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகிய 5 பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இரவு 10 மணியளவில், கிராம மக்கள் அனைவரையும் பணயக்கைதிகளாக பிடித்து, வீட்டிலிருந்து சிறிது தூரம் உள்ள காலி இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். 

இதையும் படிங்க: எல்லாமே பொய்! கேட் கீப்பர் தூங்கிட்டு தான் இருந்தாருங்க... நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்

இந்த தாக்குதல் நடந்த போது சீதா தேவின் பேரனான சோனு குமார் அங்கிருந்து தப்பி ஓடி, அருகே இருந்த உறவினரின் வீட்டில் தஞ்சம் புகுந்ததால் உயிர் தப்பினார். இதனையடுத்து சோனுகுமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்.

அப்போது, கிராமத்தின் மண் மாஃபியாவாக செயல்பட்டு வரும் நகுல் ஓரான், தனது கூட்டாளியான சனாவுல்லாவிடம் இருந்து ரூ.40,000க்கு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து, பாதி எரிந்த ஐந்து உடல்களையும் அதே டிராக்டரில் ஏற்றி, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு அருகிலுள்ள ஒரு குளத்தின் அருகே ஜேசிபி மூலம் குழி தோண்டி புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய கிராம மக்கள் தலைமறைவான நிலையில், தனிப்படை போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: பாக். உளவாளிக்கு 'RED CARPET' வரவேற்பு.. ஷாக் கொடுத்த கேரள அரசு.. யார் அந்த சர்ச்சை யூடியூபர்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share