தமிழ்நாடு ›

கடைந்தெடுத்த ரவுடிகள்… கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!

கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே வைத்திருக்கும் திமுகவை ஒட்டு மொத்தமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நயினார் தெரிவித்தார்.

கொலைகாரர்களின் கூடாரமாக திமுக மாறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சச்சரவில், உதவித் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவமூர்த்தி என்பவரை, அப்பகுதி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நயினார் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகால திமுகவின் அவல ஆட்சியில், “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

ஆனாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களை அடிமைகள் போலவும், பொம்மைகள் போலவும் நடத்தும் திமுகவினரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலினின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்றார். “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா… புகழாரம் சூட்டிய நயினார்..!!

அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், தறிகெட்டுத் திரியும் தமது கட்சிக் காரர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சம்பவம் லோடிங்…!! – இன்று மாலை அதிரப்போகும் தமிழக அரசியல் களம்… நயினார் அதிரடி அறிவிப்பு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी