இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!
நீட் மறு தீர்வு முடியும் வரை telegram செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அனுமதிக்கான மிக முக்கியமான தேர்வான NEET UG 2026, மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தக் கசிவு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே telegram போன்ற சமூக ஊடகங்களில் பரவியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழுக்களில் உறுப்பினர்கள் 400க்கும் மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நெட்வொர்க் செயல்பட்டதாக சந்தேகம் எழுந்தது. வினாத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டெலிகிராம் வழியாக பணம் பெற்று பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்தக் கசிவு குறித்த புகார்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் எதிரொலித்தன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 12, 2026 அன்று தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. மத்திய அரசின் ஒப்புதலுடன் CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மேலும் 2 பேர் கைது! சாட்டையை சுழற்றும் சிபிஐ!!
இந்த நிலையில், நாடு முழுவதும் telegram செயலுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் மறு தேர்வு முடியும் வரை telegram செயலியை பயன்படுத்தி தடை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை நீட் தேர்வின் போது டெலிகிராம் செயலி வாயிலாக வினாத்தாள் லீக் ஆனதால் தற்போது தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!