நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மேலும் 2 பேர் கைது! சாட்டையை சுழற்றும் சிபிஐ!!
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், மருத்துவ கல்வி சேர்க்கை முறையின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். ஆனால் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!
இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவின் லாத்தூரைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் மனோஜ் ஷிரூர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஒரு பயிற்சி மைய உரிமையாளரின் மகன் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு வேதியியல் வினாத்தாள்களை பெற்றுத்தந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல், புனேவில் செயல்பட்டு வரும் “அபாங் பிரபு மெடிக்கல் அகாடமி” என்ற பயிற்சி மையத்தில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனிஷா ஹவல்தார் என்பவரிடம் இருந்து இயற்பியல் வினாத்தாள்களை இவர் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மேலும் பலர் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசிய அளவில் பெரும் அரசியல் மற்றும் கல்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!