×
 

வாகன ஓட்டிகளுக்கு E20 பெட்ரோலால் பாதிப்பும் இல்லை - அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!

E20 (20% எத்தனால்) பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

வாகனங்களில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் என்ஜின் அல்லது வாகனத்தின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார்.

E20 பெட்ரோல் பயன்பாட்டின் மூலம் வாகனங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும், இது தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பலன்களைப் பட்டியலிட்டுப் பேசினார்:
E20 பயன்பாட்டின் மூலம் இந்தியா ஆண்டுக்குச் சுமார் ரூ.1.40 லட்சம் கோடி வரை அன்னியச் செலாவணியைச் சேமிக்கிறது. பெட்ரோலிய இறக்குமதியைக் குறைப்பதால் இந்தச் சேமிப்பு சாத்தியமாகிறது.

இதையும் படிங்க: Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களை (கரும்பு, சோளம் போன்றவை) வழங்குவதன் மூலம் நாட்டின் விவசாயிகள் ஆண்டுக்குச் சுமார் ரூ.40,000 கோடி வரை கூடுதல் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் இந்த எரிபொருள் கலப்புத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதாகவும் அமைச்சர் கட்கரி உறுதியளித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதையும் படிங்க: வரலாற்று சாதனை! - 2027ல் இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share