×
 

'காட்டு மாடுகளை' அவிழ்த்து விடும் பாகிஸ்தான்... இந்தியாவை பழியெடுக்க மாபெரும் தந்திரம்..!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இடித்ததிலிருந்து, பாகிஸ்தான் கோபமடைந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு மத்தியில் பாகிஸ்தான் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக கோபமடைந்த பாகிஸ்தான், இப்போது அங்கு அந்நாட்டு சிறையில் உள்ள பயங்கரவாதத் தலைவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறது. இனி பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஒரு காட்டு மாடு போல பாகிஸ்தானில் சுற்றித் திரிவார். காரணம், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதி ஹபீஸ் சயீதிடம் கருணை காட்டப் போகிறது. பிரபல பயங்கரவாதியும், லஷ்கர்-இ-தொய்பா தலைவருமான ஹபீஸ் சயீத்தை சிறையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்க பாகிஸ்தானில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இடித்ததிலிருந்து, பாகிஸ்தான் கோபமடைந்துள்ளது. இப்போது இந்த பயங்கரவாத மையங்களை மீண்டும் கட்டியெழுப்புவது எளிதல்ல. இதனுடன், உடைந்திருக்கும் அங்குள்ள பயங்கரவாதிகளின் மன உறுதியை மீண்டும் கொண்டு வருவதும் கடினம். இந்நிலையில், பாகிஸ்தான் தனது பயங்கரவாதிகளின் மன உறுதியை ஊக்குவிக்கவும், பாகிஸ்தான் முழுமையாக பயங்கரவாதிகளுடன் இருப்பதைக் காட்டவும் ஒரு புதிய உத்தியை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

அந்த உத்தியின் ஒரு பகுதியாக, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் சார்பாக பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், ஹபீஸ் சயீத் தனது தண்டனையை ரத்து செய்யக் கோரியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதியளித்ததற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததும், இந்தியா பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வழங்கியதும், பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்தை மிகுந்த அழுத்தத்தின் கீழ் கைது செய்தது. அமெரிக்கா அவரது தலைக்கு ஒரு மில்லியன் டாலர் தொகையை அறிவித்தது.

இதையும் படிங்க: காக்கும் கடவுள் விஷ்ணுவின் அழிக்கும் ஆயுதம்.. இந்தியாவை காக்கும் சுதர்சன சக்ரம்.. பாக்., திட்டம் தவிடுபொடி..!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, நீதிமன்றம் ஹபீஸ் சயீத் உட்பட சில பயங்கரவாதிகளுக்கும் தண்டனை விதித்துள்ளது. ஹபீஸ் சயீத் 2019 முதல் பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. அவர் ஒருபோதும் சிறையில் இருந்ததில்லை. இப்போது இந்தியா பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளிப்படையாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வந்துள்ளது.

இப்போது ஹபீஸ் சயீத், அவரது அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் வேறு சில தலைவர்கள் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் நீதித்துறையும் ராணுவம், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹபீஸ் சயீத் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் பாகிஸ்தானில்  ஹபீஸ் சயீத்துடன் சேர்ந்து மற்ற பயங்கரவாதிகளும் பாகிஸ்தானின் தெருக்களில் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக கோஷங்களை எழுப்புவார்கள். தங்கள் பயங்கரவாத சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவை பயமுறுத்த முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்க: உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share