×
 

ஏஐ.யை ஆயுதமாக்காதீங்க! தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கினால் முன்னேற்றம் பாதிக்கும்! பிரிக்ஸ் மேடையில் மோடி அதிரடி!

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றை விவசாயிகளின் தேவைகளுடன் இணைக்க முடியும் என்று கூறினார்.

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகின் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை ஆயுதமாக பயன்படுத்தாமல், விவசாயம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டுக்கான துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார். குறிப்பாக விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதன் மூலம் அவற்றை நம்பகமானதாகவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் மாற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து பிரதமர் மோடி முக்கியமாக பேசினார். டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாள்! மோடி தலைமையில் இன்று நடக்கப்போகும் முக்கிய ஆலோசனை என்ன?

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றை விவசாயிகளின் தேவைகளுடன் இணைக்க முடியும் என்று கூறினார்.

அதே நேரத்தில், தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிம வளங்களை ஆயுதமாக பயன்படுத்துவது உலக நாடுகளின் கூட்டு முன்னேற்றத்திற்கு தடையாக அமையக்கூடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதுடன், அவற்றின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் ஒத்துழைப்பு என்பது அரசுகளுக்கு இடையிலான நடவடிக்கையாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் மோடி கூறினார். தொழில்முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பிரிக்ஸ் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் நலனுடன் இணைத்து, விவசாயம் உள்ளிட்ட அடிப்படைத் துறைகளில் அதன் பலன்களை கொண்டு செல்ல இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதை பிரதமரின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கான ‘மாஸ்டர் பிளான்’! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு! இனி வேற லெவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share