×
 

சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

சவால்களை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறது. சந்தேகமேயின்றி இது ஒரு சவாலான நேரம். நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்த சவாலை எதிர்கொண்டு வெல்வோம் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) தனது 132-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடினார். வானொலி வழியாக காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் நிலவும் போர் சூழல் மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

பிரதமர் மோடி, மேற்காசியப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூர போரை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். “கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் புதிய தொடக்கத்தை எதிர்பார்த்தது. ஆனால், உலகின் பல பகுதிகளில் இன்னும் போர் மற்றும் மோதல்கள் தொடர்கின்றன. நமது அண்டைப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். “அந்தப் பகுதிகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்த வளைகுடா நாடுகளுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

எரிசக்தி தேவையில் வளைகுடா நாடுகள் முக்கியப் பங்கு வகிப்பதால், போர் காரணமாக உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தியா இந்த சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “சர்வதேச உறவுகள், பல நாடுகளிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் நாம் கட்டமைத்துள்ள திறன் ஆகியவற்றால் இந்த சவால்களை நாம் உறுதியுடன் சமாளித்து வருகிறோம். சந்தேகமே இல்லாமல் இது ஒரு சவாலான காலகட்டம். ஆனால் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்றால் இந்த சவாலை நிச்சயம் வெற்றி கொள்வோம்” என்று அவர் வலியுறுத்தினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், “நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும்” என்று நம்பிக்கை ஊட்டினார்.

இந்த உரை இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது உலக அளவில் நிலவும் பதற்றமான சூழலில் பிரதமரின் இந்த உரை மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: பிரிக்ஸ் நடுநிலையா செயல்படணும்! போரை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தரும் ஈரான்! தர்மசங்கடத்தில் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share