×
 

இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

ஆந்திர மாநிலம், போகபுரத்தில் ரூ.4,750 கோடி மதிப்பில் 223 ஏக்கர் பரப்பளவில் அல்லூரி சீதா ராமராஜூ சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ரூ.4,750 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அல்லூரி சீதா ராமராஜூ சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மாநில பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவில் திறக்கப்படும் முதல் சர்வதேச விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

223 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் உலகத் தரத்திலான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 3.8 கிலோமீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட நவீன ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளதால் ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற பெரிய பயணிகள் விமானங்களும் எளிதாக தரையிறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் சரக்கு முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்கள், கடல்சார் பொருட்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், விமான நிலையத்தின் கட்டிட வடிவமைப்பு மீன் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதையும் படிங்க: டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

 

#WATCH | Andhra Pradesh: Prime Minister Narendra Modi welcomed on stage in Bhogapuram in Vizianagaram. He will lay the foundation stone, inaugurate and dedicate to the nation multiple development projects worth over Rs 17,900 crores here. A short while ago, he inaugurated the… pic.twitter.com/xiqAupztmt

— ANI (@ANI) August 1, 2026

இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5.85 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வட ஆந்திராவில் தொழில், சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலைய திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக 13,750 பழங்குடியின பெண்கள் பாரம்பரிய திம்சா (Dhimsa) நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து, சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது வருகையை முன்னிட்டு போகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share