×
 

அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

'வரும் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல; அரசியல் நெருக்கடியையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்' என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.

டெல்லி: வரும் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியை மட்டுமல்ல, அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டார். நான்கரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். 

மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி அமைச்சர்களிடம், “கொரோனா பேரிடரை எதிர்கொண்டதைப் போலவே இந்த நெருக்கடியையும் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்!! பிரதமர் மோடி பிறப்பித்த அதிரடி உத்தரவு! கண்டிப்பு!

மேலும், சூரியசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் சூழல் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தினார். 2029 லோக்சபா தேர்தல் மற்றும் 2028-ம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பல மாநில சட்டசபைத் தேர்தல்களை சுட்டிக்காட்டிய அவர், “தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி, சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பெரிய மாநிலத்தை கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் பிற மாநிலங்களிலும் நடக்கலாம். பா.ஜ.க.வுக்கு எதிராக பல சதி வலைகள் பின்னப்படலாம்” என எச்சரித்தார்.

“இளைஞர்கள் ஊழல், குடும்ப ஆட்சி, ஆடம்பரத்தை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும்” எனவும் பிரதமர் வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்திருந்தால் தங்கள் நிலைமை மோசமாகியிருக்கும் என்பதையும் அவர் நினைவூட்டினார்.

பிரதமரின் இந்த எச்சரிக்கை மத்திய அரசின் உயர் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் பொருளாதார சவால்களுடன் அரசியல் சவால்களும் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share