×
 

அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி! புடின்கிட்ட அவ்ளோ செல்வாக்கு! போலந்து அமைச்சர் புகழாரம்!

உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி, போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தீவிரமாக இருந்த 2022-ஆம் ஆண்டு, ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டபோது, பிரதமர் மோடி அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசி அந்த நிலையை தவிர்க்க முக்கிய பங்காற்றியதாக அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா–போலந்து கூட்டு பொருளாதார ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த டியோபில் பர்தோஸூவ்ஸ்கி, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் உறவு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். அந்த உறவின் காரணமாகவே பிரதமர் மோடி கூறும் கருத்துகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உலக அரங்கில் பிரதமர் மோடி மதிப்புமிக்க தலைவராக உள்ளார் என்றும், பல்வேறு நாடுகளுடன் சமநிலையான உறவை பேணும் திறன் இந்தியாவுக்கு தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

ரஷ்யா–உக்ரைன் போரின் முக்கிய கட்டத்தில் பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்தியதாகவும், 2022-ஆம் ஆண்டு ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் சூழ்நிலையை புடினுடன் பேசி தடுத்ததாகவும் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார். இந்த கருத்து தற்போது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், ரஷ்யா 2022-ல் அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அல்லது அதை பிரதமர் மோடி தலையிட்டு தடுத்தார் என்ற இந்தக் கூற்றுக்கு தனித்துவமான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இதுவரை பொதுவெளியில் வெளியாகவில்லை. இந்த கருத்து போலந்து துணை வெளியுறவு அமைச்சரின் பேட்டியில் தெரிவிக்கப்பட்டதாகும்.

இந்தியா தொடர்ந்து ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வை வலியுறுத்தி வரும் நிலையில், போலந்து அமைச்சரின் இந்த கருத்து சர்வதேச அரசியல் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share