வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

உச்சக்கட்ட கொடூரம்… அதிவேகமாக மோதிய லாரி… காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்…!

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த லாரி ஓட்டுனர் ஜலீஸ் பாஷா ஜாகிரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பலியானதாக சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே இன்று காலை நடைபெற்ற கோரமான சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த 37 வயதான சங்கர்  மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதான சக்தி, அரிசானந்தம் கிராமத்தை சேர்ந்த 30 வயதான விஜய் ஆகியோர் ஒரு காரில் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளனர்.

இவர்களது கார் இன்று காலை பெரம்பலூர்   சாலையில் T -களத்தூர் அருகே வந்த போது  எதிரே பெரம்பலூரிலிருந்து துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்… கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… நடந்தது என்ன?

விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் காரில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து ஊரக காவல் நிலைய போலீஸார் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த லாரி ஓட்டுனர் ஜலீஸ் பாஷா ஜாகிரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: மலைப்பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்த வேன்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரின் நிலை என்ன?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी