×
 

"போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவர்கள் போராட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டு உறுதி அளித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தியிருந்தது.

குறிப்பாக, NEET தேர்வு முறைகேடுகள், தேர்வு மதிப்பீட்டு முறை மற்றும் கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தன. டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம் விரைவில் நாடு தழுவிய அளவில் பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

முதல் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் எந்த முடிவுக்கும் வராத நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுகள் முக்கியத்துவம் பெற்றன. அரசின் சார்பில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, “மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திய அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில், நாடு தழுவிய போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம். இது மாணவர்களின் வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அபிஜித் தீப்கே தெரிவித்தார்.இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டம் முடிவுக்கு வந்ததால் இனி படிப்பில் கவனம் செலுத்த முடியும் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதையும் படிங்க: வன்முறையாக மாறிய நீட் போராட்டம்... போர்க்களமான பீகார்..! கல்வீச்சு, தடியடியால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share