×
 

பாக். தாக்குதலால் உருக்குலைந்த குடும்பங்கள்.. காஷ்மீருக்கு சென்று ஆறுதல் கூறிய ராகுல்காந்தி!!

பூஞ்ச் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்கரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த நாட்டை முடக்கியது. 

இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளின் முகாம்கள் ஆகியவற்றை இந்திய ராணுவத்தின் விமானப்படை நள்ளிராவில் குண்டுவீசி அழித்தது. பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கேட்கும் விதமாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பேரழிவை இந்திய ஏற்படுத்தியது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாதிகள் அமைப்பின் 9 இடங்களை இந்திய ராணுவம் அழித்தது. 

இதையும் படிங்க: 2வது முறையாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி... காரணம் இதுதான்!!

இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாக, எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கிடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று நேரில் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூர ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக ஏப்ரல் 25ஆம் தேதி ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது அவர் காஷ்மீர் சென்றது இரண்டாவது முறையாகும். 

இதையும் படிங்க: டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share