#BREAKING: ரயில்வே துறையில் இந்தி மொழி கட்டாயம்! பயன்பாட்டை அதிகரிக்க ஆணை! பயணிக்க அதிருப்தி…
ரயில்வே துறையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை உலகளவில் தனித்துவமானது. 22 அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிராந்திய மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளைக் கொண்ட இந்தியாவில், மொழி என்பது கலாச்சார அடையாளத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. இந்நிலையில், இந்தி மொழியை தேசிய அளவில் முன்னிறுத்துவதாக பாஜக மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டு, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தீவிரமான விவாதங்களை உருவாக்கியது. தற்போது, தென்னக ரயில்வே கொடுத்துள்ள உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னக ரயில்வே பணிகளில் தமிழ், ஆங்கிலம் முக்கியமாக பயன்படுத்தப்படும் நிலையில் ஹிந்தியை பயன்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து இடங்களிலும் இந்த மொழியில் அதிக அளவில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் கவுண்டர்கள், ஆவணங்கள் சரிபார்ப்பு, உள்ளறிக்கைகள் என தினசரி செயல்பாடுகளில் ஹிந்தி மொழி அவசியம் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அலுவலக செயல்பாடுகளில் இந்தி மொழி பயன்பாட்டை மேம்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில்வே துறையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவிடப்பட்டதால் தென்னிந்திய ரயில்வே பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே துறையின் தொடர்பு மொழியாக ஹிந்தியை பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளதால் பயணிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலி கண்ணீர் அமித்ஷா! தமிழ்நாட்டு மக்கள் துரத்தி அடிப்பாங்க... செல்வப் பெருந்தகை திட்டவட்டம்..!
இதையும் படிங்க: அவங்களுக்கு ஹிந்தி தான் முக்கியம்! இந்தியாவில் அதிகாரக் குவிப்பு… முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!