×
 

பல கோடி ரூபாய் ஹெராயின், 11 வெளிநாட்டு ஆயுதங்கள்! ட்ரோன் மூலம் கடத்திய பாக்.,! இந்திய எல்லையில் முறியடிக்கப்பட்ட சதி!

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட 10 கிலோ ஹெராயின், 11 வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ராஜஸ்தான் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் சதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெரிய கடத்தல் முயற்சியை ராஜஸ்தான் போலீசார் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 10 கிலோ ஹெராயின், 11 வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 'ஆபரேஷன் ஷாக் வேவ்' என்ற சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் வீசப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 10 கிலோ ஹெராயின், 11 வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

இந்தப் பொருட்களை எல்லைப் பகுதியில் இருந்து எடுத்துச் செல்ல வந்ததாகக் கூறப்படும் வீரேந்திர சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் ஆப்கானிஸ்தான் தொடர்புடைய வலையமைப்பில் இருந்து வந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவது எல்லைப் பாதுகாப்புக்கு புதிய சவாலாக உருவாகி வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற கடத்தல் முயற்சிகளை தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை லி.125 ரூபாயாக உயரும்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! E20 குறித்து முக்கிய விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share