×
 

115 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி விருது: நடிகர் வாகை சந்திரசேகரை கௌரவித்த குடியரசு தலைவர்!

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் 115 கலைஞர்களுக்கு 2024-25ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற கலை நயமிக்க பிரம்மாண்ட விழாவில், 2024-25-ஆம் ஆண்டிற்கான உயரிய சங்கீத நாடக அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தியக் கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் நிகழ்த்துக் கலைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமாக இவிருதுகள் திகழ்கின்றன. இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலை மற்றும் பாரம்பரியக் கலைப் பிரிவுகளில் சிறப்பாகப் பங்காற்றிய சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைத் துறையில் ஒப்பற்ற சேவை புரிந்த 115 சான்றோர்கள் மற்றும் இளம் திறமையாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி விருதுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்.. யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த நடிகரும் கலைஞருமான வாகை சந்திரசேகருக்கு, கலைத் துறைக்குத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் பங்காற்றியதற்காக 'அகாடமி ரத்னா' (அகாடமி பெருமை) விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மூத்த கலைஞர்களுக்கான விருதைத் தவிர்த்து, வளரும் இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் 'யுவ புரஸ்கார்' விருதுகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டன.

செம்மொழி இசை, பாரம்பரிய நடனங்கள், நாடகக் கலை மற்றும் அழிந்துவரும் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கலைஞர்களுக்கு இந்த நிகழ்வில் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

கலைத் துறையைப் பேணிப் பாதுகாப்பதிலும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதிலும் விருதை வென்ற கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்தியப் பாரம்பரியக் கலைகளையும் கலாச்சாரத்தையும் உலகளவில் போற்றிப் பாதுகாக்கும் கலைஞர்களின் உழைப்பைப் பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த விருது வழங்கும் விழா இனிதே நிறைவுற்றது.

இதையும் படிங்க: "தே.ஜ கூட்டணியில் புதிய வரவு!" - டெல்லி எம்பிக்கள் கூட்டத்தில் NCPI கட்சி முதல்முறையாக பங்கேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share