பெருஞ்சோகம்...!! காஷ்மீர் மலைப்பாதையில் பயங்கர பனிச்சரிவு... 7 பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலி...!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகருக்கு வடக்கே சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில், சோஜிலா கணவாயில் உள்ள ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் பல வாகனங்கள் பனிக்குள் புதைந்ததில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டபோது, வாகனங்கள் ஸ்ரீநகரிலிருந்து கார்கிலுக்குச் சென்று கொண்டிருந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி பனியை அகற்றி, காயமடைந்த ஐந்து பேர் உட்பட சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
மீட்புக் குழுவினர் ஏழு உடல்களை மீட்ட நிலையில், காணாமல் போன இருவரை தேடும் உயிரிழந்த ஏழு பேரும் லடாக்கின் கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி இறந்த உயிர்... 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!
தனது சோசியல் மீடியா பதிவு மூலம் இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்ததை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தினார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
தகவல் கிடைத்ததும், லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் முகமது ஜாஃபர் அகூன் உள்ளிட்ட லடாக்கின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முன்னதாக, குளிர்காலத்தில் சோஜிலா கணவாய் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மூடப்பட்டு, லடாக்கை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து வந்தது. இருப்பினும், மேம்பட்ட தொழில்நுட்பம், அதிநவீன பனி அகற்றும் உபகரணங்கள் மற்றும் சிறந்த திட்டமிடல் ஆகியவற்றின் உதவியால், நான்கு நாட்களைத் தவிர, இந்தக் குளிர்காலம் முழுவதும் கணவாய் திறந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை செய்தது யார்?... தூத்துக்குடி மாணவி வழக்கில் அடுத்த திருப்பம்... வெளியானது டி.என்.ஏ. ரிப்போர்ட் ரிசல்ட்...!