வெடிக்கும் SIR விவகாரம்..! தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம்... இந்தியா கூட்டணி முடிவு..!!
தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகள் தலைவர்கள் புதுடெல்லியில் கூடி, சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் விவகாரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். வாக்காளர் பட்டியலில் பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டங்களை நடத்த முடிவு செய்தனர்.இந்த
க் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்ஜ், ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். எஸ்ஐஆர் செயல்முறையின் போது ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டதாகவும், இது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக வெளியான தகவல்களையும் சுட்டிக்காட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்தினர்.
வாக்காளர் பட்டியலை முழுமையாக வெளிப்படையாக வைக்க வேண்டும், எஸ்ஐஆருக்கு முந்தைய பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.இந்தப் பின்னணியில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் மாவட்ட அளவிலான பேரணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: SIR சர்ச்சையில் புதிய திருப்பம்! ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு! அடுத்த வாரமே விசாரணை! உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மக்களிடம் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பேரணிகளின் நோக்கம் என கூட்டணித் தலைவர்கள் தெரிவித்தனர். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான இந்த இயக்கம் அனைத்து மட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR விவகாரம் விஸ்வரூபம்! ஞானேஷ் குமாரை குறிவைக்கும் காங்கிரஸ்! கார்கே கூட்டிய அவசர கூட்டம்!