×
 

‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’..!! இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு..!! இந்திய கடற்படை அதிரடி..!!

இந்தியாவிற்கு வரும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வர ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’ என்ற திட்டத்தை தொடங்கியது இந்திய கடற்படை.

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பகுதியில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளைத் தாக்கியது.

இந்த மோதல் வேகம் பெற்றபோது, ஈரான் தனது போர் வியூகத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்களிடையே பெரும் அச்சம் பரவியது.

மேலும், ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் 28 இந்தியக் கப்பல்கள் அங்கு சிக்கிக்கொண்டன. இதனால் நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த பீதி அதிகரித்தது. இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு ஈரானுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, சிக்கிய கப்பல்கள் ஒவ்வொன்றாக இந்திய நோக்கி பயணிக்கத் தொடங்கின.

இதையும் படிங்க: வழிவிட்ட ஹார்முஸ் ஜலசந்தி..!! இந்தியா வரும் மேலும் 20 எரிபொருள் கப்பல்கள்..!! பெரும் நிவாரணம்..!!

இந்நிலையில், தொடர்ந்து நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, இந்தியாவிற்கு வரும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக இந்திய கடற்படை ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் 5க்கும் மேற்பட்ட அதிநவீன இந்திய போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம், இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி மற்றும் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய கடற்படை முழு வீச்சில் இயங்கி வருகிறது. ஹார்முஸ் நீரிணையின் மூலம் செல்லும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கை, தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், உலக அளவில் எண்ணெய் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதை இது உணர்த்துகிறது.

இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share