#BREAKING: தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைத் தூண்டியது. இந்த நிலையில், டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தெரு நாய்களுக்கு பொதுவெளியில் உணவளிக்கக்கூடாது என்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் உணவளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ரேபிஸ் நோய் பாதித்த நாய்கள் பிடிக்கப்பட்டால் மீண்டும் பொது வெளியில் விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து மூன்று நீதிபதிகள் அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்தது.
இதையும் படிங்க: வீட்டுல நாய் வளர்க்குறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த அலர்ட்! சென்னை கார்ப்பரேஷன் கறார்
மேலும், தெரு நாய்கள் தொடர்பாக அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தெரு நாய்களை கையாள்வது தொடர்பான நெறிமுறை உருவாக்க அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: தெரு நாய்கள் பாவம் இல்லையா? சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி…