×
 

பிரதமர் மோடியை சந்தித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை! ஏஐ வளர்ச்சி குறித்து ஆலோசனை!! டெல்லி மாநாட்டில் ருசிகரம்!

டெல்லியில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக அளவிலான 'இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026' மாநாட்டின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். 

பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கிய இந்த 5 நாள் மாநாடு 20-ம் தேதி முடிவடைகிறது. 20 நாடுகளின் தலைவர்கள், 45 நாடுகளின் பிரதிநிதிகள், கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான ஏஐ, அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 7 முக்கிய துறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இந்த சூழலில் இன்று டெல்லி வந்த சுந்தர் பிச்சை, ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் ஏஐ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, உலக அளவிலான ஒத்துழைப்பு குறித்து ஆழமாக விவாதித்தனர்.

இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி!! சிறந்த எதிர்காலம் உருவாகும்!! பிரதமர் மோடி நம்பிக்கை குரல்!

சுந்தர் பிச்சை வரும் 20-ம் தேதி மாநாட்டில் முக்கிய உரை ஆற்ற உள்ளார். ஏஐயின் எதிர்கால வளர்ச்சி, இந்தியாவின் பங்கு, பொருளாதார வாய்ப்புகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனது இந்திய வருகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “ஏஐ மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கம்போல சிறப்பான வரவேற்பு. செய்தித்தாள்களில் விளம்பரம் பார்ப்பதும் அருமை” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்த ஆங்கில செய்தித்தாள் விளம்பரப் பக்கம் மாநாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸையும் பிரதமர் மோடி சந்தித்து ஏஐ தொடர்பான ஒத்துழைப்பு குறித்து பேசினார். இந்த மாநாடு உலகின் முதல் பெரிய ஏஐ நிகழ்வாக கருதப்படுகிறது. இந்தியாவின் ஏஐ திறன், $400 பில்லியன் ஐடி துறை வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.

சுந்தர் பிச்சை போன்ற உலக தொழில்நுட்ப ஜாம்பவான்களின் வருகை இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்த மாநாட்டை உற்று நோக்கி வருகின்றன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி விவரமானவர்!! குறைச்சு மதிப்பிட கூடாது! பாஜகவுக்கு திடீர் பரிவு காட்டும் திமுக எம்.பி திருச்சி சிவா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share