பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் சாலையில் குவிந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில், அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை அதிவேக ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி இந்தியாவின் 26 நகரங்களை குறி வைத்து தாக்க முயற்சி செய்தது. இவற்றில் பெரும்பாலான ஏவுகணை, ட்ரோன்களை நடுவானிலேயே இந்தியா சுட்டு வீழ்த்தி விட்டது. ஒன்றிரண்டு இடங்களில் லேசான சேதம் ஏற்பட்டது.அதே நேரம் பாகிஸ்தானுக்கு பதிலடியாக அதன் 3 முக்கிய விமானப்படை தளங்கள் உட்பட 6 ராணுவ தளங்களை இந்தியா குறிவைத்து குண்டு வீசியது.
இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் வீரர்கள் கொடுத்தனர்.இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு உதவி செய்ய இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். இந்திய ராணுவத்திற்கு உதவி செய்வதற்காக, பகுதிநேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட, டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் சிவில் பாதுகாப்பு படையில் சேரலாம் என சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆர்வம் உள்ளவர்கள் தாகூர் தியேட்டருக்கு வரலாம். பயிற்சி பெற்று, தயாராக இருந்து, தேவைப்படும்போது சேவை செய்யலாம் என கூறியிருந்தார். இதை அறிந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்திற்கு உதவ அதிகாலையிலேயே குவிந்தனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
ராணுவத்திற்கு உதவுவதற்காக வந்துள்ளதாக அவர்கள் கூறினர். இளைஞர் கரண் சோப்ரா கூறும்போது, இந்தியாவுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்களிடம் இருந்து ராணுவம் என்ன எதிர்பார்க்கிறதோ, அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர்.இளம்பெண் முஸ்கான் கூறும்போது, ராணுவத்துக்கு உதவுவதற்காக இங்கு கூடியுள்ளோம். எங்களுக்காக அவர்கள் எவ்வளவோ செய்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறோம் என்றார்.பரம்பீர் சிங் கூறும்போது, நாட்டுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளோம். விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து தந்துள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: குறுக்கு புத்தியை காட்டும் பாக்., இரவோடு இரவாக போட்ட சதித்திட்டம்.. பஞ்சாப் மக்களுக்கு அச்சுறுத்தல்..!